கோபா குழுவின் தலைவர் அரவிந்த செனரத்ன இராஜினாமா
கோபா குழுவின் தலைவர் பதவியை ஆளும் தரப்பு எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதால் பதவி விலகுவதாக சபைக்கு அறிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்ன கோபா குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். கோபா குழுவின் தலைவர் பதவியை ஆளும் தரப்பு எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதால் பதவி விலகுவதாக சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 06-08-205 அன்று நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராக என்னை தெரிவு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதவி காலத்தின் போது சகல தரப்பினரது ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் செயற்பட்டேன்.
கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதால் தலைவர் பதவியை இராஜினாமா செய்து ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளேன்.இதற்மைவாகவே பதவி விலகல் தீர்மானத்தை சபைக்கு அறிவிக்கிறேன் என்றார்.





