அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் டிரம்பை வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரும் ஜெலன்ஸ்கியோடு இணைந்து அதிபர் டிரம்பை சந்திப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.





