ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமரை தலிபான் உச்ச தலைவர் நியமித்தார்
தலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா சிறப்பு ஆணையினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக மவ்லவி அப்துல் கபீரை நியமிக்கப்பட்டார். தலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா சிறப்பு ஆணையினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய பிரதமர் முல்லா முகமது ஹசன் அகுண்ட் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் குணமடையும் வரை, மவ்லவி அப்துல் கபீர் தலிபான் அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றுவார் என்றும் டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லா ஹசனின் நோய் குறித்து தலிபான் அதிகாரிகள் எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றாலும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் முன்பு கூறியதாக காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மவ்லவி அப்துல் கபீர் கிழக்கு பக்திகா மாகாணத்தைச் சேர்ந்தவர், அவர் சத்ரான் பழங்குடியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 1996-2001 வரை தலிபான்களின் முன்னாள் ஆட்சியின் போது அவர் நங்கர்ஹர் மாகாணத்தின் ஆளுநராக பணியாற்றினார்.





