திருடப்பட்ட சொத்துக்களை மீட்க பொலிஸ்துறையில் புதிய பிரிவு
விசேட நடவடிக்கைகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் 4.5பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணைகளைமேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றச் செயல்கள் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துச் சட்டத்தின்படி இந்த விசாரணை பிரிவு தொடங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் 23-08-2025 அன்று நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகங்களிடம் கருத்துரைத்த பிரதி பொலிஸ்மா அதிபர், விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய விசாரணைப் பிரிவு, பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
விசேட நடவடிக்கைகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் 4.5பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவற்றில் கட்டடங்கள், வீடுகள், வாகனங்கள், காணிகள், நகைகள், படகுகள் மற்றும் 57 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் ஆகியவை அடங்கியுள்ளன. அதன்படி, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.





