மன்னார் காற்றாலை, கனியமணல் அகழ்வுக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்
மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 19-09-2025 பிற்பகல் 2 மணியளவில் கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவிக்கையில்,
காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நேற்றுடன் 47 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,
மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது, ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் 36 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
குறித்த போராட்டத்தில் தென் பகுதி சிங்கள சகோதரர்களும், மத தலைவர்களும் இணையவுள்ளனர். எனவே குறித்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றார். அவர்களையும் வரவேற்கின்றோம்.