Breaking News
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி, சிசிபிக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு
அரசியலமைப்பு பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய போதே உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் பிரதம நீதியரசர் தவிர்ந்த ஏனைய நீதியரசர்களை நியமிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன அவர்களை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய போதே உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை 2024 அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





