Breaking News
ஒட்டாவாவில் உள்ள ஈரானின் காலி தூதரகத்தில் ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
2012 ஆம் ஆண்டில் கனடா ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்ததிலிருந்து இந்த கட்டடம் காலியாக உள்ளது.
திங்களன்று ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஈரானின் மூடப்பட்ட தூதரகம் சிதைக்கப்பட்டதை அடுத்து அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்ததாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்தனர்.
அதிகாலை 5:50 மணியளவில் யாரோ தூதரகத்தில் வேலி குதித்ததாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறுகின்றனர்.
2012 ஆம் ஆண்டில் கனடா ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்ததிலிருந்து இந்த கட்டடம் காலியாக உள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொலியில் பாதுகாப்பு வேலிக்குப் பின்னால் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் ஈரானின் தேசிய சின்னத்தை மேலே இருந்து அகற்றி, ஒரு நுழைவாயில் ஜன்னலைச் சுற்றி தள்ளுவதைக் காட்டுகிறது.





