கடல்சார் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை பலப்படுத்த இந்தியக் கடற்படை தளபதி சிறிலங்கா வருகை
2025 செப்டம்பர் 23 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா[ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் கடல்சார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்காக கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2025 செப்டம்பர் 23 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா[ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்தார். இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக கடல்சார் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவான விவாதங்களை நடத்தினர். அட்மிரல்ஸ் கோப்பை, சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் மிலன் போன்ற இந்தியா நடத்தும் பலதரப்பு முன்முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இதன்போது பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி.அருணா ஜயசேகர, பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), சிறிலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட, சிறிலங்கா விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் வி.பி.எதிரிசிங்க மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ உள்ளிட்ட பல சிரேஷ்ட பிரமுகர்களை சந்தித்தார்.