மன்னாரில் 14ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 16-08-2025 சனிக்கிழமை 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கறுப்புபட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்ததோடு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின்கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்துள்ளனர்.