ரஷ்யாவிலிருந்து 35 தொன் நிவாரணப்பொருட்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை ஏற்றிய விமானம் 11-12-2025 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ரஷ்ய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 35 தொன் நிவாரணப்பொருட்கள் நேற்று நாட்டை வந்தடைந்தன.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை ஏற்றிய விமானம் 11-12-2025 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.
அதனூடாக நாட்டுக்குக்கொண்டுவரப்பட்ட நிவாரணங்களில் ஜெனரேட்டர்கள், நீர் பாய்ச்சுவதற்கான மோட்டர்கள், கூடாரங்கள், அரிசி, சீனி, எண்ணெய் என்பன உள்ளடங்கலாக சுமார் 35 தொன் பெறுமதியான அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்குகின்றன.
இந்த நிவாரணப்பொருட்கள் இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் லெவன் தாகரியனால் துறைமுகம் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகரவிடம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.





