எர்பஸ் விமான கொள்வனவு - சந்தேகநபராக நாமல்
இந்த மோசடி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்து வரும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயர் குறிப்பிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பணச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநராக பெயர் குறிப்பிட்டு செப்டம்பர் 16 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இது தொடர்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 16 ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வாங்களிகளின் போது இலஞ்ம பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பெறப்பட்ட பணம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுகச்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளால் தெரிவித்துள்ளனர். அதற்கமைய இந்த மோசடி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்து வரும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயர் குறிப்பிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேற்படி மோசடி சம்பவம் குறித்து இரகசிய பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிட்டிருந்தனர்.
அதற்கமைய சந்தேகநபரான கபில சந்திரசேன கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் குறித்த பிணை உத்தரவு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது மைத்துனரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அரவிந்த டி சில்வாவின் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.





