இந்திய துணை ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்
இவ்விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட ஏனைய பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய புலம்பெயர் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார். இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இவ்விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட ஏனைய பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய புலம்பெயர் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்கு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை ஆகியவற்றில் இலங்கை மிக முக்கியமான பங்காளராக உள்ளது. இந்நிலையில் அண்மைய காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உயர் மட்ட ஈடுபாடுகளை அடுத்து துணை ஜனாதிபதி , இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்வதுடன் இந்த விஜயமானது இந்தியாவையும் இலங்கையும் பிணைக்கும் பல்லாயிரமாண்டுகால மக்கள் - மக்கள் உறவுகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றது என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.