கம்லூப்ஸில் டென்னிஸ் ஊழியர்கள் மூவர் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு
குற்றச்சாட்டுகள் குறித்து கம்லூப்ஸ் ராயல் கனடிய மவுண்டட் காவல்துறை (RCMP) தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில், கம்லூப்ஸ் நகரில் உள்ள டென்னிஸ் உணவகத்தில் 2023 முதல் 2025 வரை பணியாற்றிய மூன்று ஊழியர்கள், 5 இலட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை முறைகேடாக கையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கம்லூப்ஸ் ராயல் கனடிய மவுண்டட் காவல்துறை (RCMP) தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
கனடாவில் டென்னிஸ் உணவகங்களை நடத்தும் நார்த்லேண்ட் புராப்பர்டீஸ் கார்ப்பரேஷன் தாக்கல் செய்த மனுவின்படி, சமீபத்தில் நடத்தப்பட்ட உள்தணிக்கையில், இரண்டு ஊழியர்கள் இணைந்து உணவகத்தின் மின்னணு ‘டிப்’ முறையிலிருந்து சட்டவிரோதமாக 11,000 டாலரை மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது. இதற்கு முன், மூன்றாவது ஊழியர் 4.94 இலட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை திருடியதாகவும், அதுவே மற்ற இருவரை தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





