புரட்சிகர காவலர் படையின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்க ஈரானியர்களிடம் அமெரிக்கா கோரிக்கை
அமெரிக்க அரசாங்கம், தகவல் கொடுக்கும் ஈரானியர்கள் வெகுமதி மற்றும் இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீதிக்கான வெகுமதி திட்டத்தின் கீழ் ஈரானிய புரட்சிகரக் காவலர் படையின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா ஈரான் மக்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொண்டுள்ளது, அவர்களுக்காக செலவிடப்பட்ட ஈரானின் பில்லியன் கணக்கான டாலர்கள் செல்வம் ஈரானியர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.
ஈரானிய புரட்சிகரக் காவலர் படையின் நிதி வரும் வழிகளைத் துண்டிப்பதற்காக ஈரானிய மக்களை தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட அமெரிக்க அரசாங்கம், தகவல் கொடுக்கும் ஈரானியர்கள் வெகுமதி மற்றும் இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இஸ்லாமிய குடியரசு ஈரானின் செல்வத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைக்காக (ஐ.ஆர்.ஜி.சி) செலவிடுகிறது, இந்தப் பணம் ஈரான் மக்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐ.ஆர்.ஜி.சி.யின் நிதி வரும் வழிகளைத் துண்டித்து இந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்கு உதவுங்கள். ஈரானிய புரட்சிகரக் காவலர் படையின் நடவடிக்கைகள் பற்றிய உங்கள் தகவலை எங்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் வெகுமதி மற்றும் இடமாற்றத்திற்கு தகுதியுடையவராக இருக்கலாம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





