Breaking News
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு
தபால் தாமதங்கள் மற்றும் பொதுமக்கள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த பல கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை நள்ளிரவு (5) முடிவடையவிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆகஸ்ட் 9 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தபால் தாமதங்கள் மற்றும் பொதுமக்கள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த பல கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும், உரிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு எந்த சூழ்நிலையிலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.





