கொமாண்டோ சலிந்தவுக்கு மார்ச் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்ட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபரான 'கொமாண்டோ சலிந்தவை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு 27-02-2026 அன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறையில் நேற்றைய தினம் சந்தேகநபர் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் கொமாண்டோ சலிந்த தொடர்பில், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இதன்போது நீதிமன்றில் சமர்ப்பித்தனர். மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், திட்டமிட்ட குற்றச்செல்களில் ஈடுபடும் குழுவின் முக்கியஸ்தராக கருதப்படும் சந்தேகநபரை மார்ச் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் முக்கியஸ்தரான இவர், நாட்டிலிருந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த வருடம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





