18 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு ,செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சுக்கான குழுநிலை விவாதம் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரமணிப்பதற்குரிய நிதி விடுவிப்புக்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தை எதிர்வரும் வியாழக்கிழமை ஆம் திகதி கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு ,செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சுக்கான குழுநிலை விவாதம் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இவ்விவாதத்தில் உரையாற்றிய நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டின் அவசர அனர்த்த நிலைமை குறித்து விடயங்களை எடுத்துக்காட்டி, 500 மில்லியன் ரூபா நிதி விடுவிப்புக்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவினால் பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 'பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளில் 13 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2025.12.18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைப்பாணை விடுக்கிறேன் என்பதை பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகிய நான் இத்தாள் ஊடாக அறிவிக்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





