கஸ்ஸப, கல்யாணவங்ஷ தேரர்களின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைப்பு
3 ஆம் திகதிக்கு முன்னர் இந்த உத்தரவைத் தயார் செய்ய முடிந்த்தால், எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும், அப்படியானால், அது குறித்த அனைத்து தரப்பினருக்கு தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
திருகோணமலையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோர் தமது விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு ( ரிட் மனு) மீதான தீர்மானம் எதிர்வரும் பெப்ர்வரி 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்ப்ட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றம் இது குறித்த அரிவிப்பை 30-01-2026 அன்று வெளியிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (30) இந்த உத்தரவு அறிவிக்க திட்டமிட்டப்பட்டு திகதி குறிக்கப்ப்ட்டிருந்தது.
அதற்காக வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் உத்தரவு தயாராக இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் 3 ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
3 ஆம் திகதிக்கு முன்னர் இந்த உத்தரவைத் தயார் செய்ய முடிந்த்தால், எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும், அப்படியானால், அது குறித்த அனைத்து தரப்பினருக்கு தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
இந்த மனுக்கல் தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனிகளான மனோகர டி சில்வா, உதித்த இகலஹேவா ஆகியோர் ஆஜராகும் நிலையில் பிரதிவாதிகளுக்காக அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூ ஆஜராகின்றார்.





