Breaking News
பாதுகாப்புச் செயலாளருடன் சீன தூதரக புதிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
இச்சந்திப்பில், சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் ஃபூ சியாவோ, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இருநாட்டுப் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த இச்சந்திப்பில், சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





