கோட்டாவின் கொள்கையை அநுர பின்பற்றக்கூடாது: காவிந்த எம்.பி.
அரச உயர் பதவிகளுக்கு தகுதி மற்றும் சிரேஷ்டத்துடவத்தின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது.
கோட்டபய ராஜபக்ஷவின் இராணுவத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடைப்பிடிக்க கூடாது. தேசிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரியை நியமிப்பது அரச நிர்வாக சேவையை புறக்கணிப்பதாகுமென ஐக்கிய மக்கள் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சுயாதீன தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். கணக்காய்வாளர் நாயகம் பதவி கடந்த ஏப்ரல் மாத்தில் இருந்து வெற்றிடமாகியுள்ளது. இந்த பதவிக்கு தனது பல்கலைக்கழக நண்பனை நியமிப்பத்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் இதுவரையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. இறுதியாக இராணுவ அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது அதனையும் அரசியலமைப்பு பேரவை நிராகரித்தது.
அரச உயர் பதவிகளுக்கு தகுதி மற்றும் சிரேஷ்டத்துடவத்தின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக் கோட்டபய ராஜபக்ஷவின் இராணுவத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடைப்பிடிக்க கூடாது. தேசிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரியை நியமிப்பது அரச நிர்வாக சேவையை புறக்கணிப்பதாகும்.
தேசிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு கணக்காய்வாளர் திணைக்களத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் அல்லது அரச நிர்வாக சேவையில் உள்ளவரை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.





