சுரேஷ் சலேக்கு இரத்தக்கட்டிகள் - மனைவி தகவல்
அவர் தொடர்ச்சியாக கட்டிலில் இருப்பதால் கை, கால்களை அசைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
சுரேஷ் சலேவின் கைகள் வீங்கியுள்ளன, கையில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதால் வைத்தியர்கள் அதற்குச் சிகிச்சையளித்து வருகின்றனர். அவரின் வயிற்றுப் பகுதியில் ஊசி ஒன்றும் போடப்பட்டுள்ளதாக சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் 19-06-2026அன்று வைத்தியசாலைக்குச் சென்று சந்தித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மனோரி சலே, சுரேஷ் சலேவின் கைகள் மீண்டும் வீங்கியுள்ளன. கையில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதால் வைத்தியர்கள் அதற்குச் சிகிச்சையளித்து வருகின்றனர். அவரின் வயிற்றுப் பகுதியில் ஊசி ஒன்றும் போடப்பட்டுள்ளது.
அவர் தொடர்ச்சியாக கட்டிலில் இருப்பதால் கை, கால்களை அசைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார். கை வீங்கியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, அவருக்கு இரத்தக் குழாயில் இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது" என்றார்.





