பிளாஸ்டிக் போத்தல் தட்டுப்பாட்டால் குடிநீர் விநியோகிக்க முடியாதநிலை
சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு கூட விநியோத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்துள்ள குடிநீர் தேவைக்கு ஏற்றவாறு குடிநீர் போத்தல்களை விநியோகிப்பதற்கு முடியாமலிருப்பதற்கான காரணம் பிளாஸ்டிக் போத்தல்கள் தட்டுப்பாடாகும் என்று பிளாஸ்டிக் போத்தல் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக நாட்டில் குடிநீர் போத்தல்களை உற்பத்தி செய்யும் பெரும்பாலான தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் வெற்று போத்தல்களை களஞ்சியப்படுத்துவதற்கு அதிகளவான இடவசதி தேவைப்படுவதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான போத்தல்கள் மட்டுமே கையிருப்பில் வைக்கப்படுகின்றன.
இலங்கையில் மல்வான, பியகம, யக்கல, மற்றும் கண்டி ஆகிய பிரதேங்களில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.
இவை மீண்டும் இயக்கப்படுவரை சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினால் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு கூட விநியோத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை வழங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், சில தற்காலிக முகாம்களுக்கு அணுகுதல் எளிதாக இருப்பதால் அந்த இடங்களுக்கு அதிக அளவில் போத்தல்கள் கிடைக்கின்றன என்றும் அணுகுவதற்கு கடினமாக உள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகப்பதில் சிறப்பு முறைகள் தேவைப்படுகிறது என்றும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலைமை சீராகும் வரையில் இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க நேரிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.





