Breaking News
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்முதல் செய்தபோது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையில் சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மீதான முடிவு அதே திகதியில் அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் மேலும் உத்தரவிட்டார்.