ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் - நீதியமைச்சர்
இதன்மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதிமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு 70அதிகாரிகள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கைதிகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கூட்டு பொறிமுறை ஒன்றையும் அரசாங்கம் நிறுவியுள்ளது என்றார்.





