கனடாவின் ஒன்ராறியோ மாகாண லிபரல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவ்தீப் பெயின்ஸ் தேர்வு
49 வயதான பெயின்ஸ், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் 50.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக குளோபல் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் முன்னாள் மத்திய அமைச்சர் நவ்தீப் பெயின்ஸ், ஒன்ராறியோ மாகாண லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாகாணத் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதுடன், தற்போதைய முதல்வர் டக் ஃபோர்டின் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
49 வயதான பெயின்ஸ், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் 50.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக குளோபல் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற உரையில் பெயின்ஸ் கூறியதாவது:
"இந்த தலைமைப் போட்டி இத்துடன் முடிவுக்கு வரலாம். ஆனால், டக் ஃபோர்டையும் ஒன்ராறியோவின் முற்போக்குக் கன்சர்வேட்டிவ் கட்சியையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான நமது தேர்தல் பிரசாரம் இப்போதுதான் தொடங்குகிறது."





