டிரம்ப் வேடமணிந்த நபரின் நகைச்சுவைத் தாக்குதலில் சிக்கிய கனடா பிரதமர் மார்க் கார்னி
தொடர்ந்து, ஹீட்டெட் ரைவல்ரி (Heated Rivalry) என்ற தொலைக்காட்சித் தொடரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பின்னர் கனடா பிரதமரின் உடல் தோற்றம் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
கனடாவின் ஒட்டாவா நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் நாடாளுமன்றப் பத்திரிகையாளர் மன்றத்தின் விருந்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் போலவே தோற்றமளித்த நபர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் செல்வாக்கைக் கேலி செய்ததுடன், அவரது தோற்றம் குறித்தும் நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்தார்.
‘அமெரிக்க அதிபர் டிரம்பைப் போல உடையணிந்து, அவரைப் போன்றே பேசிய அந்த நபர், நவம்பர் 21, சனிக்கிழமை நடைபெற்ற அந்தச் சிறப்பு விருந்தின் மேடையில் தோன்றி, கார்னியின் அரசியல் செல்வாக்கு குறித்து நகைச்சுவையாகப் பேசி பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
டிரம்பைப் போலவே பாவனை செய்து அவர் கூறியதாவது:
"போலிச் செய்திகள்! இங்கே இரண்டு கார்னிகள் இருக்கிறார்கள். இது ஒரு பேரழிவு! இது ஆச்சரியமாக இல்லையா? இரண்டு கார்னிகள்! அவர் மிகவும் பிரபலமானவர். கிட்டத்தட்ட என்னைப் போலவே பிரபலமானவர்!"
தொடர்ந்து, ஹீட்டெட் ரைவல்ரி (Heated Rivalry) என்ற தொலைக்காட்சித் தொடரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பின்னர் கனடா பிரதமரின் உடல் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
"ஆனால், அவருக்கு அழகான பின்புறம் இருக்கிறது, இல்லையா? என்ன அழகான பின்புறம்! அவருக்கு அத்தனை அற்புதமான பின்புறம் இருக்கிறது!" என்று அவர் கூறியதும், அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
மேலும், டிரம்பின் தனித்துவமான இறுக்கமான கைகுலுக்கும் முறையையும் அந்தக் கலைஞர் மேடையில் நடித்துக் காட்டினார். அப்போது மார்க் கார்னி மற்றும் மற்றொரு டிரம்ப் வேடமணிந்த நபருடன் அவர் கைகுலுக்கினார்.





