மைத்திரி குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசாரணை
குறித்த சமர்ப்பனத்திலிருந்து சில பகுதிகளை மாத்திரம் சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவானால் மேன்முறையீட்டு நீதிமன்றதுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த முறைப்பாடு 13-11-2026அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடயங்களை முன்வைக்கையி்ல், தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகீஸ்வர பண்டாரவுக்குப் பிணை வழங்குமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நீண்டதொரு சமர்பனத்தை மன்றில் முன்வைத்திருந்தார். அதற்கமைய குறித்த சமர்ப்பனத்திலிருந்து சில பகுதிகளை மாத்திரம் சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்தில் மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், குறித்த மனு ஜனவரி 26ஆம் திகதி பரிசீலனைகச்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.





