ரொக்கட் கருத்துக்களால் ஜே.வி.பிக்குள் முரண்பாடு: சஞ்ஜீவ எதிரிமான்ன
ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.
ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 11-08-2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை காரியாலயத்தில் உடைந்து விழுந்த ரொக்கெட் பற்றி விசேட அவதானம் செலுத்த வேண்டும்.உண்மையை நீண்டகாலம் மறைத்து வைக்க முடியாது என்பது பௌத்த மத அற கோட்பாடாகும்.
மதம் மீது நம்பிக்கையில்லாத இந்த அரசாங்கத்துக்கு மத கோட்பாடுகளே இன்று எதிராக முடிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனை தொடர்புப்படுத்தி இதுவரை காலமும் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதமர் ஹரிணி அமரசூரிய பொய்யாக்கியுள்ளார்.
ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
போலியான வாக்குறுதிகள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களினால் தாம் ஏமாற்றப்பட்டதை மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் வெகுவிரைவில் அணிதிரள்வார்கள் என்றார்.





