Breaking News
அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்?
அடுத்ததாக பொலிஸ் மா அதிபராக பதவியேற்கும் நபர் யார் என்ற ஊகங்கள் நிலவி வருகின்றன.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பொலிஸ் மா அதிபராக பதவியேற்கும் நபர் யார் என்ற ஊகங்கள் நிலவி வருகின்றன.
இந்த விசேட பதவி நீடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள போதிலும், புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேசபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோர் பொலிஸ் படையின் உயர்மட்ட பதவிக்கான வேட்புமனுக்களில் அடங்குவர்.





