செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஜனாதிபதி நாளை விசேட உரை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்புக்கு இணங்கள் 'செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாடு 2026' இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 17-02-2026 அன்று இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்காகக்கொண்டு புதுடில்லியில் நடைபெறும் இம்மாநாட்டில் 19-02-2026 வியாழக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிப்பதற்கு அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது. அதேவேளை இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்புக்கு இணங்கள் 'செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாடு 2026' இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 17-02-2026 அன்று இந்தியா பயணமானார்.
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்காகக்கொண்டு புதுடில்லியில் நடைபெறும் இம்மாநாட்டில் 19-02-2026 வியாழக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிப்பதற்கு அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
அதேவேளை இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





