Breaking News
இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்
கே.ஆர்.உடுவாவல சுற்றாடல் அமைச்சின் செயலாளராகவும், வை.எல்.மொஹமட் நவவி விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றாடல் அமைச்சு மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கான இரண்டு புதிய செயலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கே.ஆர்.உடுவாவல சுற்றாடல் அமைச்சின் செயலாளராகவும், வை.எல்.மொஹமட் நவவி விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனக் கடிதங்கள் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.





