அமெரிக்க வரிவிதிப்பு குறித்த அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு திலித் பாராட்டு
அனைத்து உள்நாட்டு சிறிலங்கா தொழில்முயற்சியாளர்களின் சார்பாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறிலங்கா ஏற்றுமதி மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு தொடர்பில் சர்வகட்சி மாநாட்டை நடத்துமாறு விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்தமைக்காக சர்வஜன பலய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜயவீர ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
"இந்த முக்கியமான மற்றும் சவாலான நேரத்தில் அனைத்து கட்சி மாநாட்டிற்கான எனது அழைப்புக்கு சாதகமாகப் பதிலளித்த அனைத்து உள்நாட்டு சிறிலங்கா தொழில்முயற்சியாளர்களின் சார்பாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் சேர்ந்து, சிறிலங்கா மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக வைத்துச் சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக ஜெயவீர தெரிவித்தார்.