Breaking News
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை
ஆபத்தான நிலையில் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார

மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் வியாழக்கிழமை காலை குருகிராமில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முதற்கட்ட தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட தந்தை ராதிகாவை நோக்கி மூன்று தோட்டாக்களை சுட்டார், இதனால் அவர் படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார. ஆனால் சிகிச்சையின் போது அவர் இறந்தார்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட தந்தையைக் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட சுழல் துப்பாக்கி வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.