அமெரிக்க அரசுக்கும் தூதுவருக்கும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் நன்றி தெரிவிப்பு
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத வரி தொடர்பாக, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
நெறிமுறை தொழிலாளர் நடைமுறைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஆடைத் துறையின் புத்தாக்கமான முன்னேற்றங்களுக்கான அர்ப்பணிப்புடன் அமெரிக்காவுடனான வணிக உறவை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம் வொஷிங்டனில் உள்ள இராஜதந்திர குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிவித்துள்ளது.
முதலில் 44 சதவீதமாகவும் பின்னர் 30 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்ட அமெரிக்க தீர்வை வரி தற்போது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத வரி தொடர்பாக, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த வரி விகிதத்தை மாற்றுவதற்காக, அமெரிக்க வணிக பிரதிநிதிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிதி அமைச்சு செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.
வொஷிங்டனில் உள்ள இராஜதந்திர குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் பங்களிப்புக்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் சிறப்பு நன்றி தெரிவிக்கிறது.





