பெர்லின் பிரைட் விழா தாக்குதல்: இஸ்லாமிய தீவிரவாத செயல் என ஜெர்மனி சந்தேகம்
ஜெர்மனியில் பிறந்த லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு குற்றவியல் மற்றும் தீவிர இஸ்லாமிய தொடர்புகள் இருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற பிரைட் விழாவுக்கு அருகில் இடம்பெற்ற கொடிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
21 வயதுடைய சந்தேக நபர் அப்துல் பல்லவுட், முதலில் பாதசாரிகள் மீது வாகனத்தைச் செலுத்தியதுடன், பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின்போது அவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனியில் பிறந்த லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு குற்றவியல் மற்றும் தீவிர இஸ்லாமிய தொடர்புகள் இருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்புடையிருக்கக்கூடிய பிற நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேலும் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஜெர்மன் அரசாங்கத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பிரைட் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.





