பாராளுமன்றுக்கு வெளியேயும் எதிர்கட்சிகள் இருகின்றன : ஜனாதிபதி அநுர, மனோ எம்.பிக்கு தெரிவிப்பு
யாரையும் பெயர் குறிப்பிடாமல், பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள சிலர் ஊடக மாநாட்டில் அரசை விமர்சித்ததாகவும், அப்போது மனோகணேசனும் அங்கே இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்துக்குள் மட்டுமல்ல பாராளுமன்றுக்கு வெளியேயும் எதிர்கட்சி கள் இருகின்றன என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் வாதிட்ட பொழுது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
பாராளுமன்றத்தில் 20-03-2026 அன்று உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , “ஒரு தருணத்தில், அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்திருக்கவில்லை என்று அரசை குற்றம் சாட்டும் எதிர் கட்சி, மற்றொரு தருணத்தில் ரஷ்யாவுடன் இணைந்திருக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியது” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்தை மனோ கணேசன் எம்பி எழுந்து நின்று மறுத்தார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பாராளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சி இருப்பதாக குறிப்பிட்டார்.
யாரையும் பெயர் குறிப்பிடாமல், பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள சிலர் ஊடக மாநாட்டில் அரசை விமர்சித்ததாகவும், அப்போது மனோகணேசனும் அங்கே இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்கு மனோ கணேசன், அது ஒரு (அரசியல்) கூட்டணி அல்ல; மாறாக அது ஒரு (அரசியல்) பொது மேடை என விளக்கமளித்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்குள் மட்டுமல்லாது, வெளியிலும் இருப்பதாக ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தினார்.





