இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்
லீட்டர் 340 ரூபாவுக்கு இருந்த ஒக்டேன் 95 வகை பெற்றோல் மற்றும் 182 ரூபாவுக்கு இருந்த மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்தம் மேற்கொண்டுவரும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்துக்கான விலை திருத்தம் 01-03-2026 அன்று முதல் செயற்படும்வகையில் விலை திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் 277ரூபாவுக்கு இருந்த ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 4ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அதன் புதிய விலை 281 ரூபாவாகும். 323ரூபாவுக்கு இருந்த சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 6ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும். அத்துடன் 292 ரூபாவுக்கு இருந்த ஒக்டேன் 92வகை பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 293ரூபாவாகும்.
மேலும் லீட்டர் 340 ரூபாவுக்கு இருந்த ஒக்டேன் 95 வகை பெற்றோல் மற்றும் 182 ரூபாவுக்கு இருந்த மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.
இதேவேளை,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் விலையும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.





