குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறிலங்கா வந்தார்
மே 18 முதல் 20 வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் அவர், மே 19 அன்று தாஜ் சமுத்ராவில் நடைபெறவுள்ள 'ஏக்கமுத்துவா: இசை, தியானம் மற்றும் ஞானத்தின் மாலை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
உலகளாவியச் சமாதானத் தூதுவரும் ஆன்மீகத் தலைவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (18) பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்தார்.
அவர் சிறிலங்கா வந்தடைந்த பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டுவிமான நிலையத்தில் ஆன்மீகத் தலைவரை வரவேற்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் இராஜாங்க அமைச்சருடன் இணைந்து கொண்டார்.
மே 18 முதல் 20 வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் அவர், மே 19 அன்று தாஜ் சமுத்ராவில் நடைபெறவுள்ள 'ஏக்கமுத்துவா: இசை, தியானம் மற்றும் ஞானத்தின் மாலை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு யோகா குரு மற்றும் உலகளாவிய மனிதாபிமான மற்றும் அமைதித் தூதர் என்று பிரபலமாக அறியப்படும் ஆன்மீகத் தலைவர் ஆவார். இவர் 'ஆழ்நிலைத் தியானம்' என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.