சீரற்ற காலநிலையால் 4,300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இலங்கைக்கு வடகிழக்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது . அத்துடன் நாட்டின் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பான அவசர எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது . இதனால் நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் வங்காள விரிகுடாவின் ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் . எவ்வாறிருப்பினும் அடுத்த 7 நாட்களில் இந்த அமைப்பானது சூறாவளியாக (தாழமுக்கமாக) மாறுவதற்கான நிகழ்தகவு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.





