குற்ற புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்த யோஷித ராஜபக்ஷ
முற்பகல் வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த அவர், அதிகாரிகளால் சுமார் மூன்று மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக 13-08-2026 அன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
முற்பகல் வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த அவர், அதிகாரிகளால் சுமார் மூன்று மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
சுங்க வரி செலுத்தாது சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் போலிப் பதிவுகளை மேற்கொண்டு வாகன பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேற்படி விசாரணைகளின் போதே, அவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றை யோஷித ராஜபக்ஷ பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் யோஷித்தவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.