ஐ.நா சபையின் விசேட பிரதிநிதியுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
அவருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 23-06-2026 அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த மற்றும் பரந்துபட்ட அணுகுமுறையைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழித்தல் தொடர்பான தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
அவருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 23-06-2026 அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த, பரந்துபட்ட அணுகுமுறையைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழலைக் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார முன்னேற்றம், செயற்திறன்மிக்க அபிவிருத்தித் திட்டங்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு மாற்றங்கள், கொள்கை மறுசீரமைப்புக்கள் என்பன சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.





