மேல்மாகாண ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்
ஆளுநர் பதவிக்கான பொறுப்புக்கள் மற்றும் குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் எதிர்கொண்டுள்ள சவால்களினால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் பதவியை ராஜினாமா செய்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆளுநர் பதவிக்கான பொறுப்புக்கள் மற்றும் குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் எதிர்கொண்டுள்ள சவால்களினால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,: ஆளுநர் பதவி தொடர்பில் அண்மைகாலமாக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறுப்பட்ட ஊகங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்துகிறேன்.
ஆளுநராக அரச இயந்திரத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றல், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக வழங்கப்பட்ட மேலதிக பொறுப்பை நிறைவேற்றுவதுடன், எனது குடும்பத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுதலின் போது கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதால், ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை இதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியிருந்தேன்.
இதற்கமை தகுதியான ஒருவரை ஆளுநராக நியமிக்கும் வரை ஆளுநர் பதவியை தொடர்வேன். வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காகவும், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக எனது வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக தற்போது வகிக்கும் பதவியை தொடர்ந்து வகிப்பதை கௌரவமாக கருதுகிறேன்.





