போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
இந்த தேசிய பேரழிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து முழு நாடும் ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் சிறையிலுள்ள நபர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவிற்கு ஏற்ப துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும், இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்,பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அமைப்புகளுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறைமையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் 10-08-2026 அன்று இச்சபை கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.
நச்சுப் போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளையும் தாண்டி, முழு பொருளாதார மற்றும் சமூக அமைப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையிலும், அது மேலும் வளர்ச்சியடைந்து வருவதைக் கருத்திற் கொண்டும் இந்நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்கநெறி அமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதன் அவசியம் குறித்தும் ' முழு நாடும் ஒன்றாக ' தேசிய செயல்பாட்டு சபையில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முழு சமூக அமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியை இரையாக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் பேரழிவை வேரோடு பிடுங்கியெறிவதற்காக,நாட்டிற்குள் நடைமுறை ரீதியான செயல்பாட்டையும் விரைவான சித்தாந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் செயலுக்கமுள்ள பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்த தேசிய பேரழிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதித் கட்டத்தில் உள்ளதாகவும்இ அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்குப் பிரதான காரணமாக இருந்த இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் சிறையிலுள்ள நபர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவிற்கு ஏற்ப (5 கிராமிற்கும் குறைவாக, 10 கிராமிற்கும் குறைவாக என) துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும், இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அமைப்புகளுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறைமையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு வினவிய ஜனாதிபதி, பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகளுக்காக கடற்படையின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.பாதுகாப்பு கேமரா அமைப்புகளைப் பொறுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.





