அறத்தை பின்பற்றுமாறு இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் - பஞ்ஞாகர தேரர்
இலங்கையில் தம்புள்ளையில் ஆரம்பித்த 'அமைதிக்கான நடைப்பயணம்' 28-04-2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது.
இலங்கை மக்கள் அன்பானவர்கள், கருணைமிக்கவர்கள். கௌத்தம புத்தர் உலகுக்கு அன்பு மற்றும் அறத்தையே போதித்தார்.ஆகவே அன்பு, அறத்தை பின்பற்றுமாறு இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வியட்நாமிய பௌத்த துறவியான பஞ்ஞாகர தேரர் வலியுறுத்தினார்.
அமைதி நடைபவனி யாத்திரைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் உட்பட இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் ஆசி வழங்குகிறோம்.அன்பும் அமைதியும் நிலைக்கட்டும் என்றார்.
இலங்கையில் தம்புள்ளையில் ஆரம்பித்த 'அமைதிக்கான நடைப்பயணம்' 28-04-2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் விசேட சொற்பொழிவாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: உலக அமைதியை இலக்காக் கொண்டு நாங்கள் ஆரம்பித்த நடைபவனி யாத்திரையின் போது இலங்கை புனித பூமி எங்களை அன்போடு வரவேற்றது. மழை, வெப்பம், குளிர் எமக்கு புதிதல்ல, எமது உடல் அதற்கு பழக்கப்பட்டுள்ளது. இலங்கை அழகான நாடு, மக்கள் அழகானவர்கள். அவர்களின் மனங்களும் அழகானவை.
நாங்கள் நடைபவனி செல்லும் போது மக்கள் எம்மை அன்புடன் வரவேற்றார்கள். வாழை இலைகளையும், பூக்களையும் கொண்டு எமது பாதங்களை மென்மைப்படுத்தினார்கள். மக்களின் மனங்களை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். எமது பயணத்தை ஊக்கத்துடன் தொடர்ந்தோம்.
இலங்கை மக்கள் அன்பானவர்கள், கருணைமிக்கவர்கள். கௌத்தம புத்தர் உலகுக்கு அன்பு மற்றும் அறத்தையே போதித்தார்.ஆகவே அன்பு, அறத்தை பின்பற்றுமாறு இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அமைதியானது நாடுகள் மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அமைதியே அனைத்துக்கும் முதன்மையானது. ஆகவே முழு உலகும் அமைதியை நாட வேண்டும். அன்பை வெளிப்படுத்த வேண்டும். எம்முடன் சேர்ந்து பயணித்த அலோகாவுக்கு மொழி தெரியாது. ஆனால் அதுவும் அன்பினால் தொடர்பாடலை விளங்கிக் கொண்டது.
இந்த நடைபவனி யாத்திரைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் உட்பட இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் ஆசி வழங்குகிறோம்.அன்பும் அமைதியும் நிலைக்கட்டும் என்றார்.





