இலங்கை - மாலைதீவு 60 ஆண்டுகால இராஜதந்திர உறவை முன்னிட்டு மரக்கன்று நடுகை
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸுவை, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிக உற்சாகமாக வரவேற்றதுடன், இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த சிறுவர்கள், மாலைதீவு ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவைக் குறிக்கும் வகையில் 04-05-2026 அன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸுவை, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிக உற்சாகமாக வரவேற்றதுடன், இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த சிறுவர்கள், மாலைதீவு ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





