ஆட்சியை எம்மிடம் தாருங்கள் சிறந்த முறையில் நிர்வகிப்போம் - மஹிந்த ராஜபக்ஷ
கட்சி என்ற ரீதியில் நாங்கள் பலமாகவே உள்ளோம். ஆட்சியை மீண்டும் எமக்கு தாருங்கள். நாட்டை சிறந்த முறையில் நிர்வகிப்போம் என்று மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள். ஆட்சியை மீண்டும் எமக்கு தாருங்கள். நாட்டை சிறந்த முறையில் நிர்வகிப்போ மென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் 14-06-2026அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்கள் பாரிய கஸ்டங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் இன்று முகங்கொடுத்துள்ளார்கள்.ஒருவேளை உணவை கூட முழுமையாக பெற்றுக்கொள்ள நிலையில் மக்கள் உள்ளார்களா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.
கட்சி என்ற ரீதியில் நாங்கள் பலமாகவே உள்ளோம். ஆட்சியை மீண்டும் எமக்கு தாருங்கள். நாட்டை சிறந்த முறையில் நிர்வகிப்போம் என்று மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
அரசியலில் வெறுப்பை முன்னிலைப்படுத்தி செயற்பட்டால் அதனால் குறுகிய கால வெற்றியே கிடைக்கும். தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளது.
கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளோம்.மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என்றார்.





