சுற்றுலா சேவைகள் தடையின்றி இயங்க விசேட கியூ.ஆர் திட்டம்
சுற்றுலா துறையில் ஈடுபடுபவர்கள் எவ்வித தடையுமின்றி தமது பணிகளை முன்னெடுப்பதை உறுதி செய்வதற்காக சுற்றுலா துறைக்கு என்று தனியான விசேட கியூ.ஆர் முறை ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் கியூ.ஆர் முறை அமல்படுத்தப்பட்டது.
சுற்றுலா துறையில் ஈடுபடுபவர்கள் எவ்வித தடையுமின்றி தமது பணிகளை முன்னெடுப்பதை உறுதி செய்வதற்காக சுற்றுலா துறைக்கு என்று தனியான விசேட கியூ.ஆர் முறை ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவிக்கையில், சுற்றுலாத்துறைக்கு எரிபொருளை பெறுவதற்கு விசேட கியூ.ஆர் குறியீடு முறையை அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வித தடையுமின்றி தமது சேவைகளை வழங்குவதற்கும், குறிப்பாக எரிபொருள் உள்ளிட்ட தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கும் இந்த விசேட கியூ.ஆர் முறையை அமல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(16) நடைபெற்றது. மேலும், இலங்கை சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்துள்ள சுற்றுலாச் சேவை வழங்குநர்களுக்கு மட்டுமே இந்த கியூ.ஆர் குறியீடு வசதி முறை வழங்கப்படும் என்றார்.