பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்சுக்கு விஜயம்
மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதமர் ஒரு முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸின் மனிலாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை நேற்று காலை செய்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதர் சானக தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகளுடன் வரவேற்றனர்.
மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதமர் ஒரு முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.





