அமைச்சர் ஹெந்துன்நெத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அனுமதியற்ற வகையில் ஐந்து கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட அரசியை விடுவிப்பது தொடர்பில் இறக்குமதியாளருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்திக்கும் இடையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்தே குறித்த முறைப்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளார்.
தனது குரல்பதிவுவொன்று தவறாக சித்தரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும், அதனால் தனது கௌரவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டு அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அனுமதியற்ற வகையில் ஐந்து கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட அரசியை விடுவிப்பது தொடர்பில் இறக்குமதியாளருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்திக்கும் இடையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்தே குறித்த முறைப்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கொழும்புத்துறைமுகத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி ஐந்து கொள்கலன்களில் அரசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்தை அடுத்து அது தொடர்பில் ஆராய்ந்திருந்தேன்.
அச்சமயத்தில் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவருக்கு, அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டமைக்கான தண்டப்பணம், துறைமுக செலவுகள் உள்ளிட்ட விடயங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினேன். அந்த உரையாடலை பதிவு செய்து பின்னர் திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. ஆகவே குறித்த அபகீர்த்தி ஏற்படுத்தும் திட்மிட்ட செயற்பாட்டுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளேன் என்றார்.
இதேவேளை, குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட துமிந்த திசாநாயக்க மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே 309 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு எந்தவிதமான வெளிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை.
இப்போது, அனுமதியற்ற இறக்குமதி தொடர்பில் உரையாடுவதற்கு எந்த விடயங்களும் இல்லை. அதற்குரிய சட்ட நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறான நிலையில் உரையாடப்படுவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.





