ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ளது
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. எனவே இதன் நேரடித் தாக்கம் குறையத் தொடங்கும். இதனால் இன்றிலிருந்து நாட்டின் மழை நிலைமை குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்தா ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. இது தற்போது (நேற்று நண்பகல்) திருகோணமலையிலிருந்து கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட பகுதி ஊடாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டின் வடக்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட மாகாணத்திலும், புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். குருநாகல், பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை வீசக்கூடும். சில சமயங்களில் இது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்றாக வீசக்கூடும். கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்கள் மற்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து வருவதால், இதன் நேரடித் தாக்கம் குறையத் தொடங்கும். இதனால் இன்றிலிருந்து நாட்டின் மழை நிலைமை குறைவடையும் என்றார். இதேவேளை கண்டி - உடுதும்பர பிரதேச செயலகப்பிரிவு, மாத்தறை - வில்கமுவ, நுவரெலியா - மத்துரட, ஹங்குராங்கெத்த, வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலையின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை - பசறை, பதுளை, ஹாலிஎல, மீகஹாகிவுல, கந்தேகெட்டிய, வெலிமட, லுணுகல மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், கண்டி - மினிப்பே பிரதேச செயலகப்பிரிவுக்கும், மாத்தளை - லக்கல, பல்லேகம, நாவுல, இறத்தோட்டை, உக்குவெல, அம்பன்கங்ககோரள பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியா - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவுக்கும் முதலாம் நிலையின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. எனவே இதன் நேரடித் தாக்கம் குறையத் தொடங்கும். இதனால் இன்றிலிருந்து நாட்டின் மழை நிலைமை குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்தா ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது.
இது தற்போது (நேற்று நண்பகல்) திருகோணமலையிலிருந்து கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட பகுதி ஊடாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாட்டின் வடக்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட மாகாணத்திலும், புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
குருநாகல், பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை வீசக்கூடும். சில சமயங்களில் இது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்றாக வீசக்கூடும்.
கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்கள் மற்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து வருவதால், இதன் நேரடித் தாக்கம் குறையத் தொடங்கும். இதனால் இன்றிலிருந்து நாட்டின் மழை நிலைமை குறைவடையும் என்றார்.
இதேவேளை கண்டி - உடுதும்பர பிரதேச செயலகப்பிரிவு, மாத்தறை - வில்கமுவ, நுவரெலியா - மத்துரட, ஹங்குராங்கெத்த, வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலையின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை - பசறை, பதுளை, ஹாலிஎல, மீகஹாகிவுல, கந்தேகெட்டிய, வெலிமட, லுணுகல மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், கண்டி - மினிப்பே பிரதேச செயலகப்பிரிவுக்கும், மாத்தளை - லக்கல, பல்லேகம, நாவுல, இறத்தோட்டை, உக்குவெல, அம்பன்கங்ககோரள பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியா - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவுக்கும் முதலாம் நிலையின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.





